பொருட்பால்

வரைவின் மகளிர்

இயல் : நட்பியல்
911 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் 
இன்சொல் இழுக்குத் தரும். 
 

மு.வ : அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.


சாலமன் பாப்பையா : அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.


The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from afection but from avarice, will cause sorrow.

912 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் 
நயன்தூக்கி நள்ளா விடல். 
 

மு.வ : கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.


One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

913 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் 
ஏத஧ல் பிணந்தழீஇ அற்று. 
 

மு.வ : பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.


சாலமன் பாப்பையா : பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.


The false embraces of wealth-loving women are like (hired men) embracing astrange corpse in a dark room.

914 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் 
ஆயும் அறிவி னவர். 
 

மு.வ : பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.


சாலமன் பாப்பையா : அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.


The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.

915 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் 
மாண்ட அறிவி னவர். 
 

மு.வ : இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.


சாலமன் பாப்பையா : இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.


Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trfling delights of those whose favours are common (to all).

916 தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப் 
புன்னலம் பாரிப்பார் தோள். 
 

மு.வ : அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.


சாலமன் பாப்பையா : தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.


Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).

917 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் 
பேணிப் புணர்பவர் தோள். 
 

மு.வ : நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.


சாலமன் பாப்பையா : பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.


Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

918 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப 
மாய மகளிர் முயக்கு. 
 

மு.வ : வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.


சாலமன் பாப்பையா : வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.


The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.

919 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் 
பூரியர்கள் ஆழும் அளறு. 
 

மு.வ : ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.


சாலமன் பாப்பையா : வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.


The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.

920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் 
திருநீக்கப் பட்டார் தொடர்பு. 
 

மு.வ : இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.


சாலமன் பாப்பையா : உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.


Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.

133 அதிகாரங்கள்